May 5, 2015

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்! - சர்வதேச ஊடக அமைப்பு கண்டனம் !

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச ஊடகவியலாளர் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.


மே தினக் கூட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி மற்றும் கலாநிதி குமுது கசுன் குமார ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியமானது என சர்வதேச ஊடகவியலாளர் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன இணைந்து கூட்டாக தெரிவித்துள்ளன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment