May 27, 2015

வித்தியா கொலைக்கு எதிர்ப்பு! சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்படுவர்: ரணில்!

வித்தியா படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியோரில், சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்படுவர் என ரணில் தெரிவித்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் வித்தியா படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியோரில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், அப்பாவி இளைஞர்களும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்தும் தடுத்துவைக்காது விடுதலைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரணிலுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்தார்.
இக் கோரிக்கையை ஏற்ற பிரதமர் சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment