May 27, 2015

சுவிஸ் குமார் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.!

புங்குடுதீவு மாணவி படுகொலை மற்றும் அதனை தொடர்ந்து உருவான பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்த விசேட பொலிஸ்குழுவின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் குமார் என்றழைக்கப்பட்ட மகாலிங்கம் சசிக்குமார் என்ற ஆசாமிக்கும்,
புங்குடுதீவு பொலிசாருக்கும் இருந்த நெருக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த நெருக்கத்தினால்த்தான் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இந்த ஆசாமியை பொலிசார் விடுவித்தனர். பொலிசாரின் இந்த பொறுப்பற்ற நடத்தைதான் யாழில் போராட்டங்கள் தீவிரம் பெற காரணமாக அமைந்தது என விசேட விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, காவல்த்துறை தலைமையகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து  தகவல் கிடைத்துள்ளது.
சுவிஸ் குமார் என்ற ஆசாமி புங்குடுதீவு பொலிசாருக்கு அடிக்கடி மதுவிருந்து வைத்து, அவர்களை வளைத்துப் போட்டு வைத்திருந்திருக்கிறான்.
வித்தியா கொலையின் காமுகர்கள் மூவர் முதலில் கைதாகினர். பின்னர் சுவிஸ் ஆசாமி உள்ளிட்ட ஆறுபேர் கைதாகினர். புங்குடுதீவு பொலிசாருக்கு வழக்கமாக தண்ணிப்பார்ட்டி வைக்கும் சுவிஸ் ஆசாமியுடன் கொண்டிருந்த உறவு காரணமாக, அவரை மட்டும் பொலிசார் விடுவித்துள்ளனர்.
இதனையடுத்தே சுவிஸ் குமார் வெள்ளவத்தைக்கு தப்பிச் சென்றுள்ளான்.
சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விபரத்தை அறிந்த மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியது, பொலிசாரின் பொறுப்பற்ற நடத்தையால் என்றும், ஆசாமி கைதானதும் மக்கள் இயல்புக்கு திரும்பி விட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment