May 27, 2015

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயம்(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி, ஏ-9 வீதி கரடிப்போக்குச் சந்திக்கு அருகில் இன்று மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளி.யூனியன் குளத்தைச் சேர்ந்த சங்கரன் (வயது-30) என்பவரே இவ்விபத்தில்
படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா​ர்.
ஏ-9 வீதியால் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment