யாழ்.பல்கலைக்கழக கலைபீடதில் ஊடகத்துறையை சிறப்புக்கலையாக கற்றுவரும்
நான்காம் வருட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பதின்மூன்று குறும்படங்கள்
நாளைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
அத்துடன் ‘காட்சி மொழி கைநூல்’ என்ற தலைப்பில் அமைந்த நூல் ஒன்றும்
வெளியிடப்படவுள்ளன.
சமூகத்தின் பல்வேறு யதார்த்த நிலைகளைப் பற்றியதான கருவை மையப்படுத்தி ஊடகக் கற்கைகள் அலகின் உதவி விரிவுரையாளர் சுடர்விழி ராஜ்குமாரின் தயாரிப்பு ஆலோசனையில் மாணவர்களினால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் நாளைய தினம் பிற்பகல் 3 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வெளியிடப்படவுள்ளன.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம், சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதியும் பங்குகொள்ளவுள்ளனர். குறும்படங்களிற்கான மதிப்புரையினை சக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெனேஸ் ஜெகசுதன் ஆற்றவுள்ளார்.

No comments:
Post a Comment