May 28, 2015

ஜேர்மனியில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!

ஜேர்மனி நாட்டில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் வாடகை வீடுகளில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு
வீட்டு உரிமையாளர்கள் விதிக்கப்படும் வாடகை கட்டணம் வருடம்தோறும் அதிகரித்து வருவதாக அரசிற்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார்களை பரிசீலனை செய்த அரசு, கடந்த 2013ம் ஆண்டு ‘வாடகை கட்டணங்கள் கட்டுப்பாட்டு சட்டங்களை’ அதிரடியாக அறிவித்தது.
குடியிருப்புவாசிகளுக்கு விதிக்கப்படும் வாடகை கட்டணத்தை வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவில் உயர்த்தப்பட்டு வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வாடகை கட்டணத்தை 30 சதவிகிதமாக வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தியது குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் வாடகை கட்டணத்தை 10 சதவிகிதம் மட்டுமே உயர்த்த வேண்டும் என்று அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்த புதிய சட்டம் தற்போது சட்டப்பூர்வமாக அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு அறிவுறுத்தியுள்ள 10 சதவிகித வாடகை கட்டணத்தை விட கூடுதலாக வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது.
ஜேர்மனியில் உள்ள பெர்லின் மாகாணத்தில் மட்டும் இந்த புதிய சட்டம் எதிர்வரும் யூன் முதல் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
பெர்லினை தொடர்ந்து மற்ற மாகாணங்களிலும் எதிர்காலத்தில் இந்த புதிய சட்டம் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment