May 28, 2015

இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்!

இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக, நட்பு ரீதியான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment