May 28, 2015

ஜேர்மனி செய்தி ஜேர்மன் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் கழிப்பறை திருடர்கள்

ஜேர்மன் உளவு நிறுவனத்தின் கழிப்பறைகளில் நடந்துவரும் தொடர் திருட்டை தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
ஜேர்மன் நாட்டின் உளவு நிறுவனமான பி.என்.டி உலகின் நான்காவது பெரிய உளவு நிறுவனமாகும்.

இந்நாட்டைச் சேர்ந்த, 4,000த்திற்கும் அதிகமான உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றன.
பெர்லினில் உள்துறை அமைச்சகத்திற்கும், பி.என்.டி உளவு நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலக கட்டிடத்தின் கழிப்பறைகளில் இருந்து, டொய்லெட் சீட் கவர், பேப்பர் ரோல் போன்றவற்றை சிலர் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உளவு நிறுவனத்தின் கட்டிடத்தில் உள்ள கழிப்பறைகளில் இருந்த குழாய்களை, திருடர்கள் பிடுங்கிச் சென்ற சம்பவம் வெளியே தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, தன்னுடைய அலுவலகத்தை பாதுகாக்க முடியாத உள்துறை அமைச்சர், நாட்டை எவ்வாறு பாதுகாப்பார் என்று அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், உள்துறை அமைச்சர் தாமஸ் தே மெஜியேரேயும், உளவு நிறுவனமும் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment