May 29, 2015

காதலியைக் கைவிட்டு விட்டு அலுவலகப் பெண்களின் பாதுகாப்பில் இன்னொருத்தியை மணந்த மன்மதன்!



மிகத் தாறுமாறான கலாச்சாரப் பிறள்வுகளுடன் யாழ்ப்பாணத்தில் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கற்பழிப்பு, ரவுடித்தனம், கொலை, கொள்ளைகள், போதைப்பொருள் பாவனை என படு கேவலமான நிலையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருக்கின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களே இவற்றை ஊக்குவிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த 20ம் திகதி யாழ்ப்பாணம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. அதற்குக் காரணம் வித்தியா கொலையால் ஏற்பட்ட பதற்றமும் கடையடைப்பும், ஆா்ப்பாட்டமுமே ஆகும்.
ஒரு பெண்ணிற்காக யாழ்ப்பாணமே கொதித்துக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் அநியாயம் நடந்து கொண்டிருந்தது.
யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல அரசாங்க செயலகம் ஒன்றில் கடமையாற்றும் ஒரு பெண் உத்தியோகத்தரான பிரியா (பெயர் மாற்றம்) இன்னொரு ஆண் உத்தியோகத்தரான சுரேஸ் (பெயர் மாற்றம்) ஒருவருக்கொருவர் உயிருக்குயிராகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்த விடயம் அந்த அலுவலகத்தி்ல் உள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தது. அத்துடன் இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
பிரியாவிடம் இருந்து சுரேஸ் அவ்வப்போது பெருமளவு பணத்தையும் வாங்கியுள்ளான். தனது காதலன்தானே என பிரியா பெருமளவு பணத்தை சுரேசிடம் கொடுத்துள்ளாள்.
இதே வேளை குறித்த இரு காதலர்களுக்கிடையேயும் ஊடல் இடம்பெற்று ஒரு மாதமாக இவர்கள் கதைக்காது இருந்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறு இருக்க சுரேஸ் திடீரென தனது கலியாண வீட்டுப் பத்திகையை அலுவலகத்தில் கொடுத்துள்ளான்.
சுரேசின் கலியாணவீட்டுப் பத்திரிகையைப் பார்த்த பிரியா அதிர்ச்சி அடைந்துள்ளாள். தன்னைக் காதலித்த சுரேஸ் இன்னொரு பெண்ணை மணம் முடிக்க இருப்பதை அறிந்து அலுவலகத்தில் பெரும் புயலைக் கிளப்பி சுரேசுடன் சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது.
கலியாண நாள் அன்று தான் திருமணத்தை நிறுத்துவேன் எனவும் பிரியா கத்தியுள்ளாள். இவற்றை எல்லாம் அலுவலகத்தில் இருந்தவர்கள் சமாளித்து பிரியாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.
சுரேசிற்கு அலுவலகத்தில் பெரும் செல்வாக்கு இருந்ததாகவும் பெருமளவு அலுவலர்கள் சுரேசின் பக்கம் நின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண நாள் அன்று அலுவலகத்தின் உயரதிகாரியான பெண் பிரியாவை அவசர அலுவல் எனத் தெரிவித்து தொலைபேசியில் அழைத்துள்ளார்.
பிரியாவும் சுரேசின் திருமணத்தை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளாள். இருப்பினும் அப் பெண் உயரதிகாரி பிரியாவை உடனடியாக அலுவலகத்திற்கு வா... அவசர வேலை என அழைத்த போது பிரியாவும் அலுவலகத்திற்கு சென்ற பின் திருமண வீட்டுக்குச் செல்லாம் என நினைத்து அலுவலகம் சென்றுள்ளாள்.
அங்கு சென்றவுடன் பிரியாவை அங்கு நின்ற பெண் அலுவலர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பெண் அலுவலர்கள் சிலருடன் சேர்த்து ஒரு அறைக்குள் மூடியுள்ளனர். அவர்கள் பிரியாவை சமாதானப்படுத்த முயன்றதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து அலுவலகத்தில் பிரியா கத்திக் குளறிய போது உயரதிகாரியான பெண்ணும் பிரியாவை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார். நீ கலியாண வீட்டுக்குச் சென்றால் அங்கு உன்னைக் கண்டதுண்டமாக வெட்டுவதற்கு மாப்பிளையின் உறவினர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது பஸ்கரிப்பு நடக்கின்றது. அதை வைத்தே உன்னைத் தாக்குவார்கள் என அலுவலகத்தில் இருந்த பெண் பணியாளர்களும் உயரதிகாரியும் பிரியாவை பயம் காட்டி வைத்திருந்துள்ளனர். இருந்தும் பிரியா திருமணத்திற்கு செல்ல முற்படவே அவளை அறைக்குள் வைத்து மூடியதாக அலுவலகத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை குறித்த அலுவலகத்தின் ஆண் அலுவலர்கள் திருமண மண்டபத்திற்குச் சென்று மாப்பிளைக்கு பாதுகாப்பாக நின்றுள்ளனர். திருமணமும் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணத்தின் முக்கிய அலுவலகங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வித்தியாவிற்கு நடந்த கொடுமையை யாழ்ப்பாணமே சேர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்த அதே சமயம் பிரியாவிற்கும் கொடுமையான விடயம் நடந்துள்ளது.
சுரேசின் பக்கத்தால் வந்த தகவல்களின் படி சுரேஸ் பிரியாவுடன் நட்பாகப் பழகியது உண்மை எனவும் ஆனால் காதலிக்கவில்லை என்றும் தவறான நடவடிக்கையில் சுரேஸ் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அலுவலகத் தகவல்களின் படி இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் நெருக்கமாகப் பழகியதாகவும் காதலித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை தற்போது பிரியா யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையத்தில் சுரேசுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக சுரேசின் வீட்டுக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகி்னறது.

No comments:

Post a Comment