May 29, 2015

பட்டிக்காட்டானுக்கு முட்டாசுக்கடை காட்டும் ஐங்கரநேசன் !



எங்கட வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கனக்க திருகுதாளங்கள் எல்லாம் செய்துகொண்டு இருக்கிறார். அவரைப் போல இன்னொரு முக்கியஸ்தரும் பல செப்படி வித்தைகள் செய்து கொண்டு இருக்கிறாராம்.

ஐங்கரநேசத்தாரிடம் பிடிச்ச ஒரு விசயம் என்னவெனடால் தன்னைப் பற்றி தவறான செய்தி வந்தவுடன் இயக்கத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளுறதுதான் பாருங்கோ....
இன்டைக்கு இந்தச் செய்தியைப் போட்டிருக்கிறம்... நாளைக்கு பாருங்கோ உதயன் பத்திரிகையிலயும் தன்ர வாலுகள் நடாத்துற சில இணையத்தளங்களிலும் இப்புடி துணிச்சலான சில அறிக்கைகளைப் போட்டு மனுசன் சமாளிச்சுப் போடும்....
‘‘புதுவை இரத்தினதுரையைப் போல ஒரு சிறந்த கவிஞன் உலகத்திலேயே இல்லை‘‘
விடுதலைப்புலிகள் இருக்கும் போது பக்கத்துவீட்டுக்காரியை நேருக்கு நேராப் பாக்கவும் விடமாட்டார்கள்
இப்புடி சில பல புல்லரிக்கும் அறிக்கைகளையும் வீர வசனங்களையும் விட்டுப் போட்டு மனுசன் தன்ர பாட்டுக்கு தன்ர வேலையைப் பாக்கும்.....
ஜெயிலுக்க எத்தனை அரசியல் கைதிகள் இருக்கிறாங்கள்..... எத்தனை மாவீரர், போராளி குடும்பம் இருக்குது என்டதெல்லாம் ஐங்கரத்தாருக்கு தெரியாது...
ஐங்கரத்தார் இரணைமடுத் தண்ணிக்குப் பதிலா கடல் தண்ணியை சுத்திகரித்துக் கொண்டு வரப் போவதாய்  அறிக்கை விட்டிருக்கிறார்.
யாழ்ப்பாண மக்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து லச்சம் லீற்றர் தண்ணி வேணும். ஆனால் கடல் நீரைச் சுத்திரித்து 24 ஆயிரம் லீற்றர் தண்ணிதான் கொடுக்க முடியுமாம்.
அப்போ அது எதுக்கு..................... கழுவுறதுக்கோ...
இதுதான் செய்தி... இதுக்கு கீழே அவுஸ்ரேலியாவில் நடந்த சம்பவத்தின் காணொலியும் இணைக்கப்பட்டுருக்குது .கேட்டுப் பாருங்கோ 
மருதங்கேணியில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை ஒன்று அமைக்கப்பட்டு அங்கிருந்து யாழ்.குடாநாட்டுக்கு நீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளன.
ஆனால், இந்த திட்டத்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையக்கூடிய அபாயம் உள்ளதாக மருதங்கேணி கடற்றொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதை மறுத்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், குறித்த ஆலையால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
மேற்படி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு, வடமாகாணசபை குடாநாட்டுக்கான குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று யோசனையாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தது.
ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் ஏற்றுக் கொண்டு, கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைப்பதற்கான இடமாக மருதங்கேணி தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மருதங்கேணிக் கடற்பரப்பில் இருந்து கடல் நீரைப் பெற்றுக் குடிநீராக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சிலரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்தே, இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு முதல்வர் .வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், மாகாணசபை அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், .குருகுலராஜா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட நிபுணர் நிக்கோலாய் கலந்து கொண்டு திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்ததோடு கேள்விகளுக்குப் பதில்களையும் வழங்கியிருந்தார்.
இவ்விசேட கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்து வரும் திட்டம் கைவிடப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியைக் கடல் நீரை நன்னீராக்கப் பெறுவது என்ற திட்டம் எம்மால் முன்மொழியப்பட்டு உரிய தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது.
ஆனால், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்துவரும் பழைய திட்டத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சிலர் இன்னமும் உள்ளனர்.
அவர்களின் பின்னணியில்தான் மருதங்கேணியில் அமைய இருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.
கலந்துரையாடலில் பங்கேற்ற நிபுணர் நிக்கோலாய் மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் மாறாக, இப்பகுதியில் புதிய மீன் இனங்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment