May 27, 2015

வித்தியா படுகொலை: யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி  சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மாணவப் பயிர்களை மேயாதீர்கள், பெண் முன்னேற்றம் எல்லாம் வீண் பேச்சுத்தானா?, நீதி வேண்டும் எமக்கு.... மரணம் வேண்டும் பாதகர்களுக்கு, கந்தகம் சுமந்த வழி வந்தோரை கசக்காதீர், பெண் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் பதித்த அட்டைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment