May 27, 2015

வித்தியா படுகொலை குறித்து கொழும்பில் பெண்கள் அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாடு(படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை குறித்து இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றுள்ளது.


புங்குடுதீவு வித்தியாவை வன்புணர்ச்சிக்குட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும்,
அவர்களுக்கு பிணை வழங்கப்படக்கூடாது
குறிப்பிட்ட 6 மாத்திற்குள் இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
நேற்று வித்தியா, நாளை தெற்கில் சித்ராவோ, பாத்திமாவோ, ஆரியவதியோ இனி இவ்வாறு ஒரு சிறுமிக்கு நடைபெறக் கூடாது.
தெற்கில் இதேபோன்று எத்தனையோ விடயங்கள் அரசியல்வாதிகளினாலும், ஆடம்பரக்காரர்களினாலும் பெண்களுக்கு நடைபெறுகின்றது. இவைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.
வித்தியாவின் புகைப்படத்தைப் பிரசுரித்து ஊடகங்கள் சேதப்படுத்தக் கூடாது.
தெற்கில் யாழ்ப்பாண தமிழ் சிறுமி வித்தியா என்று நோக்காமல் இந்த நாட்டின் தாய் பெற்றெடுத்த இலங்கைச் சிறுமி என ஊடகங்கள் பார்கக் வேண்டும்.
இவ் விடயத்தில் இன, மத, பிரதேச ரீதியாக இலங்கை பிரஜைகள் சிந்திக்க வேண்டாம்.
இன்று கொழும்பில் உள்ள இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கருத்துக்கள் தெரவிக்கப்பட்டது.
இம் மாநட்டில் விழுது ஆற்றல் மேம்படுத்துகை நிறுவனத்தின் தலைவி சரோஜனி கனேந்திரன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தர்மதாச, இலங்கை பெண்கள் வன்முறைக்கான சங்கத்தின் இணைப்பாளர் சமியா பெர்னாண்டோ, இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் பிரதி ஆணையாளர் விசாகா திலகரத்ன ஆகியோரும் இங்கு கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இவ் வழக்கு ஜூன் முதலாம் திகதி நடைபெறும் போது கொழும்பில் 1000 பெண்கள் மெழுகுதிரி பற்ற வைப்பர்.
அத்துடன் பெண்கள் அமைப்பின் பிரநிதிகள் 100 பேர் யாழ் நீதிமன்றம் செல்லுவோம்.
சென்று குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது. வழக்கை ஒத்திவைத்து காலம் தாழ்த்துதல், குற்றவாளிகளை விடுதலை செய்து ஆண்டுக்கணக்கில் அவ் வழக்கினை கொண்டு செல்வதல்,  உச்ச தண்டனை வழங்க நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவோம்.
இந்தப் பெண் தமிழ் அல்லது கொழும்பு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று நாம் பார்க்கக் கூடாது.
திருமதி சரோஜினி கனேந்திரன் - விழுது ஆற்றல் மேம்பாட்டு சங்கத்தின் தலைவி கருத்து தெரிவிக்கையில்,
சமூகப் பொறுப்பு பொலிசாருக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பெற்றோர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ,நீதிமன்றங்கள் அப்பிரதேசவாசிகளுக்கும் உள்ளது.
பிள்ளை பாடசாலை விட்டு 10 நிமிடம் வீடு வரவில்லையென்றால் அந்த வகுப்பு ஆசிரியர் பெற்றோர் கைத்தொலைபேசி முலம் குறுந்தகவல் கொடுத்து அறிய வேண்டும்.
இந்த நடைமுறை அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது. இது இலங்கையிலும் அமுல்படுத்தப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment