இதன்போது மக்கள் அரைநிரந்தர விடுகள் மற்றும் காணிகள் துப்புரவு செய்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டபகுதிகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளார்
.
வலி,வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வறுத்தலைவிளான், பளை, வீமன்காமம், வளலாய் பகுதிகளுக்கு அவர் சென்றிருந்தார்.
இதனடிப்படையில் மீள்குடியேறிய மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அதனடிப்படையில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment