கவனயீர்ப்பு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு நீதிமன்றம் தடைசெய்யாது என பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை சந்தியில் இருந்து கோட்டு வாசல் அம்மன் கோவில் வரை ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை புங்குடுதீவு சம்பவம் தொடர்பாக நடத்துவதற்கு பருத்தித்துறை நகரசபை தலைவர் சபா ரவீந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதனை தடை செய்யுமாறு பருத்தித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த அறிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்து கொண்ட பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிஸாருக்கு பதிலளிக்கையில்- ஏற்கனவே குறிப்பிட்டவாறு அவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு நீதிமன்றம் தடைசெய்யாது.
மேலும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடத்துவது மக்களின் உரிமைகளெனவும் அவ்வாறான போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது, பொதுமக்களுக்கும் பொது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. ஏதாவது தவறுகள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு.
ஆகவே பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் பொதுமக்களையும் பொதுச்சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிடுகிறது. ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதிப்பதை நீதிமன்றம் நிராகரிக்கிறது.
மேலும் இவ்வாறான தடை கட்டளையை வழங்கு வது தொடர்பில் மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியன பல வழக்குகளை நிராகரித்துள்ளமையை இந்நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது என தெரிவித்தார்.

No comments:
Post a Comment