புங்குடுதீவின் தொடர்ச்சி 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! கிளிநொச்சியில் கொடூரம்!
புங்குடுதீவு மாணவி படுகொலையின்
தொடர்ச்சியாக கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச்
சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப்பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்
திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை
இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கியுள்ளனர். பின்னர் அங்கேயே சிறுமியைக் விட்டுச்சென்றுள்ளனர்.
வாயில் துணி அடைந்தபடி மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியைக் கண்ட ஒருவர்
பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிறுமி மாற்றப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment