May 30, 2015

அச்சுவேலியில் 14 வயதுச் சிறுமியைக் கர்ப்பமாக்கிய வியாபாரி - காசு கறக்கும் சிறுமியின் தாய்!

அச்சுவேலிச் சந்தையில் மீன் வியாபாரம் செய்யும் கண்ணன் என்னும் நபர் தனது வீட்டுக்கு அண்மையில் தாயாருடன் வசித்து வந்த 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனால் அச் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். சிறுமி கர்ப்பமுற்றதையும் குறித்த கர்ப்பத்திற்கு மீன்வியாபாரியே காரணம் என்பதையும் சிறுமியின் தாயார் அறிந்துள்ளார்.


சிறுமியின் கர்ப்பத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தாயார் இதன் பின்னர் மீன் வியாபாரியான கண்ணனை பொலிசுக்கு தெரிவிப்பதாகக் கூறி தொடர்ச்சியான அச்சுறுத்தல் மேற்கொண்டு லட்சக் கணக்கான பணத்தை பெற்றுவருவதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக சிறுவர் அமைப்புக்கள் கவனம் செலுத்தி சிறுமியின் கர்ப்பத்திற்க காரணமானவர்கள் மீதும் அதனை மூடி மறைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இச் சம்பவத்தை அறிந்துள்ள அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment