May 30, 2015

வடக்கில் தொடரும் வாள்வெட்டு கலாச்சாரம்: நேற்று ஊர்காவற்துறையில் அரங்கேற்றம்!

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த இனம்தெரியாத குழுவினர்,வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினரே, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையிலான குழு ஒன்று இது தொடர்பிலான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment