ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோர்கான் மூர் காட் இன்று யாழ்ப்பாணம் வருகைதந்து இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.இதன்போது இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ்.ஆயர்,
யாழ்ப்பாத்தின் நிலைமைகளை அறிந்துகொள்ளும் வகையில் ஜேர்மனியத் தூதுவர் இங்கு வந்திருந்தார். குறிப்பாகப் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்து சென்ற பின்னரான நிலைமைகள், காணி விடுவிப்புத் தொடர்பாகவே அவர் எம்மிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இதைவிட வடபகுதி இளையோரின் ஆதங்கங்கள், எதிர்பார்ப்புக்கள் குறித்தும் கேட்டறிந்த தூதுவர், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.- என்று ஆயர் கூறினார்.
No comments:
Post a Comment