
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
அவருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நிதிக் குற்றவியல் பிரிவிலிருந்து சற்று நேரத்திற்கு முன்னர் பசில் உள்ளிட்ட மூவரும் கடுவெல நீதவானிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரும் கடுவெல நீதிமன்றிற்குள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபக்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்ததுடன் நேற்று நாடு திரும்பினார்.



No comments:
Post a Comment