பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் (2017) �பல அரசியல்
மாற்றங்கள் இடம்பெறலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர், இதன்படி பிரான்ஸ் அரசியலில் முக்கிய புள்ளிகளாக நிக்கோலா சார்கோசி , மரின் லு பென், �ஆகியவர்கள் இடம் பிடித்து வருகின்றனர்.
பெரும்பாலும் பிரெஞ்சு மக்களின் அதிக வாக்குகள் �சார்கோசி க்கு செலுத்தும் காரணங்கள் அதிகமாகியுள்ளன, ஏனெனில் பிரான்சில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால் பிரெஞ்சு மக்கள் �வெளிநாட்டவர்கள் மீது ஒரு விதமான கசப்புணர்வையே கொண்டுள்ளனர்,
அத்துடன் பிரான்சில் அதிகரித்து வரும் மத பேதங்களும் இதற்குக் காரணமாகும், �சார்கோசி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மக்களுக்கு அதிக சலுகைகள் காணப்பட்டாலும் மறு பகுதியில் வெளிநாட்டு மக்களை ஓரம் கட்டும் பணியும் சத்தமில்லாமல் நடைபெற்றது, அத்துடன் முதலாளித்துவத்துக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது,
இவைகளில் பல தற்போதைய ஜனாதிபதி போன்சுவா ஓலந் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டன, வெளிநாட்டு மக்கள் பலர் இவரது காலத்தில் தான் பிரான்சில் வசிப்பதற்கான அனுமதி அட்டைகளை அதிகம் பெற்றுள்ளனர்,
ஆனால் மக்களுக்கு ஒருகையால் கொடுத்துக்கொண்டு மறுகையால் பறிக்கும் படியாக வருமானவரி அதிகப்படியாக உயர்த்தப்பட்டது, இதனால் பல பிரான்ஸ் முன்னணி நிறுவனங்கள் பிரான்சிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயர வைத்தது, இதனால் பல பிரெஞ்சு மக்கள் வேலையை இழந்தனர்,
அத்துடன் முக்கிய காரணமாக ஓரின திருமணம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது , இதனால் பல பிரஞ்சு மக்கள் இவருக்கெதிராக அணி �திரண்டனர், �இதுவும் இவரின் செல்வாக்கை நேரடியாக செயலிழக்க காரணமாய் இருந்தது குறிப்பிடத் தக்கது,
அடுத்ததாக மரின் லு பென்
பிரான்சின் அதிக மக்களால் சில காலங்களுக்கு முன்னர் �வெறுத்து ஒதுக்கப்பட்ட இவர் தற்போதைய காலத்தின் முன்னணி அரசியல் பெண்ணாக வலம் வந்துகொண்டிருகிறார் , வெளிநாட்டு மக்களுக்கெதிரான தனது உணர்வை பலமுறை தொலைக்காட்சிகளில் நேரடியாகவே தெரிவித்துள்ளார்,
இப்படியானவர் ஜனாதிபதியானால் பிரான்சில் பல மாற்றங்கள் இடம்பெறும், வெளிநாட்டு மக்களை குறைக்கும் இவரின் எண்ணம் கைகூட சாத்தியங்கள் அதிகமாக காணப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை,
இவைகள் எப்படி பிரான்சில் வாழும் தமிழ் மக்களை பாதிக்கும் என்று பார்க்கப்போனால்,,,,
��பிரான்சில் பல தமிழர்கள் பிரெஞ்சு மொழியை வாசிக்க, கதைக்க தெரியாமல் உள்ளனர், இதனால் அடுத்தவர்கள் என்ன சொல்கின்றனரோ அதையே நாமும் �செய்யலாம் என்ற நோக்கிலேயே அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். �இவைகள் தான் புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் �பிரான்சில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வித்தியாசம்,
இதில் முக்கியமானதொன்றாக பிரஞ்சுக் குடியுரிமை
பல தமிழர்கள் முப்பது �வருடங்களுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த போதும் பிரான்சுகுடியுரிமையை பெறாமல் அதெல்லாம் எடுத்தா அகதிகளுக்கான சலுகைகள் கிடைக்காது என்று ஒரு எண்ணத்தால் வேலையும் ,வீடும் ,லாச்சப்பலும் என்று இருக்கின்றனர், இது தான் எமது முட்டாள் தனம்,,
அகதி அந்தஸ்து �உள்ள ஒருவருக்கு என்ன சலுகைகள் இருக்கின்றனவோ அதை விட அதிகமாக �பிரெஞ்சுக் �குடியுரிமை உள்ள ஒருவருக்கு மட்டுமே பிரான்சில் அதிக செல்வாக்குகள் காணப்படுகின்றன, இது பல தமிழ் மக்களுக்கு புரிவதில்லை,
நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றால் அரசு சம்பந்தமான எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. இதைத்தான் நம்மில் பலர் பிழையாக எண்ணுகின்றனர்,
உங்களிடம் பிரெஞ்சுக்குடியுரிமை இருந்தால் நீங்கள் ஐரோப்பாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம், இதை விட உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுக்கலாம்,
இனி வரும் காலங்களில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் , இதனால் அதிகமான சட்டங்களை அரசும் கொண்டுவரலாம்.
இதனால் தமிழ் மக்களே உங்கள் வாழ்விற்கு வெளிச்சத்தை கொடுக்க இன்றே பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கான வழியை பாருங்கள் , ஆட்சி மாறினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
|
No comments:
Post a Comment