இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி புத்திசாலித்தனமாக செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை
குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது என பல நாடுகள் எடுத்த முடிவை நியாயப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது�
கேள்வி- இந்திய பிரதமரின் விஜயத்தின் போது கைச்சாத்தான உடன்படிக்கைகள் இந்திய இலங்கை உறவுகளின் இயல்பை மாற்றுமா?
பதில்-இலங்கையில் நல்லாட்சியை நிலைநாட்டும் எமது முயற்சிக்கு இந்தியா என்றும் துணையிருக்கும் என்ற வலுவான செய்தி இந்திய பிரதமர்pன் விஜயம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விஜயத்தின் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் இலங்கை இந்திய உறவுகளின் இயல்பை மாற்றுமா என்பது எனக்கு தெரியாது, எனினும் இடைநடுவில் முறிவடைந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அது துணைபுரியும்.
கேள்வி- எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீனவர்களை சுடும் கருத்து வேறு அணுகுமுறையை பிரதிபலிக்கின்றதே?
பதில்- அவர் வேடிக்கையாகவே அதனை தெரிவித்தார் . மக்கள் அதனை பிழையாக புரிந்துகொண்டனர்,ஊடகவியலாளர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு அவரை துன்புறுத்தினர்.அதற்பு பதிலளித்த அவர் விரும்பத்தகாத நபர் எனது வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் அவரை எல்லைமீறியதற்காக சுடுவதற்கு எனக்குரிமையுள்ளது என குறிப்பிட்டார்.
கேள்வி- ஏன் மீனவர் விவகாரத்திற்கு தீர்வை காணமுடியாத நிலை காணப்படுகின்றது?
பதில்- இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.டயனமைட்டை பயன்படுத்துவது போன்ற முறைகளை, இது ஏற்றுக்கொள்ள முடியாதவிடயமாகும்,எமது கடல்வளத்தை அவர்கள் அழிக்கின்றனர்.இது இலங்கை மீனவர்களுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும் விடயம்.இந்தியாவில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் இலங்கையில் இது தடைசெய்யப்பட்டுள்ளது.
கேள்வி- மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா இரு தடவைகள் வாக்களித்துள்ளது, புதிய அரசாங்கம் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை எவ்வாறு பார்க்கின்றது?
பதில்-பல நாடுகள் எங்களுக்கு எதிராக வாக்களித்தன,அதற்கான நியாயப்படுத்த கூடிய காரணங்கள் இருந்தன.
முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களின் மனித உரிமைவிடயங்களில் வளைந்துகொடுக்காத நிலைப்பாட்டை கடைப்பிடித்தது,ஊடக சுதந்திரம் சிங்கள மக்களின் மனித உரிமை விடயங்களில் கூட அது அவ்வாறே செயற்பட்டது.எனினும் அவ்வேளை இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தற்போது புதிய அரசாங்கத்தின் விடயத்தில் நெகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்பட்டுள்ளது.இது சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உள்நாட்டு விசாரணையொன்றை நாம் மேற்கொள்வதற்கு உதவியாக அமையும்.
கேள்வி- சீனாவுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை பேணியது இந்தியாவின் கரிசனைக்குரிய விடயமாக காணப்பட்டது,சிறிசேன அரசாங்கம் தனது வெளிவிவகார கொள்கையை மாற்றுமா?
பதில்-அது முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது. ராஜபக்ச அனைத்து முதலீட்டு திட்டங்களையும் சீனாவிற்கு வழங்கினார்.
இருகட்சி கூட்டணியான எமது அரசாங்கம் அணிசேரா கொள்கையை பின்பற்றுகின்றது.உலகின் எந்த நாட்டையும் அவை எவ்வளவு நட்பான நாடாகஇருந்தாலும் எங்களை துஸ்பிரயோகம் செய்ய அனுமதிக்கமாட்டோம். கேள்வி- சாதாரண இலங்கை மக்கள் இந்தியா குறித்து என்ன கருதுகிறார்கள்?
பதில்-இரு நாடுகளுக்கும் இடையில் 3000 ஆண்டு நெருக்கமான உறவுகள் காணப்படுகின்றன,இந்தியா குறித்து எமது மக்களுக்கு நிறைய அன்பும் மதிப்பும் உள்ளது.
அதேவேளை சில அச்சங்களும் உள்ளன.தென்னிந்திய மன்னர்கள் 52 தடவை இலங்கையை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்கள் எமது நீர்ப்பாசன திட்டங்களை அழித்தனர். அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது , மேலும் மக்கள் இந்தியர்கள் எங்களை போன்றவர்கள் இல்லை என கருதினர் அந்த எண்ணம் மிக சமீபகாலம் வரை நீடித்தது.
இந்திராகாந்தி புத்திசாலித்தனமற்ற விதத்தில் செயற்பட்டார்,அவரின் ஆட்சிக்கு பின்னர் அனைத்து ஆட்சியாளர்களும் இலங்கையுடன் நல்லுறவை பேண முயன்றனர்.

No comments:
Post a Comment