எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தற்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கவேண்டும் என்று ஒட்டுக்குழுவான
ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்று முற்போக்கு தமிழ் தேசிய முன்னணி என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள விஜயகாந்த் கோரியுள்ளார்.தமது கட்சியின் சார்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பில் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.
எதிரணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அதில் குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை,மீள் குடியேற்றம் போன்றவை பேசப்பட்டதாகவும் அதற்கு மைத்திரிபால தரப்பினர் உடன்படவில்லை என்றும் தற்போதைய மகிந்த அரசாங்கத்தோடு பேசிய போது மூன்றாவது முறையாகவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை , காணிகள் மீள ஒப்படைத்தல், வடமாகாண சபைக்கு குடிய அதிகாரங்கள் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளமையால் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கே தமது ஆதரவை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் மகிந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்பதையும் கைதிகள் என்ற பெயரில் தமிழர்களை சிறையில் அடைத்ததும்,தமிழர்களை தங்களது காணிகளிலேயே வாழவிடாமல் அனாதையாக்கியதும் யார் என்பதை ஒட்டுக்குழுவிலிருந்து பிரிந்து புதிய கொள்கை புதிய பாதை என்று அறிக்கை விட்டு கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.
No comments:
Post a Comment