December 9, 2014

துயர் நீக்குவோம் வாரீர் ---யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை!

நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர்  சூழ்ந்து  நிற்கின்றது . அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள்
அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதிகளாக   தகர குடிசைக்குள் வாழவேண்டிய  துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . வீடிழந்து  வாழ்விழந்து அங்கமிழந்து  துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது .

நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில்  பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு மலையகத்தில் தொடரும் மண்சரிவுக்கு மக்கள் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கான  எம் உறவுகள்  எவ் வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . சிறப்பாக குழந்தைகள் பால்மா பற்றாக்குறைவால் பரிதாவ  நிலையில் உள்ளார்கள் . எத்தனையோ மக்கள் ஈர உடுப்புகளால் குளிர்ந்து விறைப்படைந்த நிலையில் உள்ளார்கள் .

இப்படியாக தவித்துக்கொண்டு இருக்கும் எம் மக்களுக்கு காலத்தின் தேவை கருதி என்றும் எம் மக்களுக்கான பணியை செய்த நாம் இன்றும் உயர்ந்த நோக்கத்துக்கான மக்கள் பணிக்கு மனமுவர்ந்து கடமையுணர்வுடன் செய்யும் பொருளாதார பங்களிப்பு நமது தேசத்தில் துயரில் வாடும் உறவுகளின் துன்பம் நீக்கும் பங்காக அமையும் என்பது திண்ணம் .

இன்றும் இயற்கை அனர்த்தத்தால் எவ்வித உதவியும் இல்லாமல் எமது உதவிக் கரங்களை நாடி நிற்கும் நம் உறவுகளுக்கு உதவிடுவோம் .தாயக மக்களின் துயர்துடைக்க யேர்மனியில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட தொண்டர்நிறுவனம் தகவல் பின்வருமாறு : 


Help for smile e.V.
Konto - Nr.     1034926014
BLZ:              32060362 ( Volksbank Krefeld )
Stichwort : Flutopfer 2014
தொடர்புகட்கு பாதர் Albert Koolen 
Albertkoolen@gmx.de

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை



No comments:

Post a Comment