November 27, 2014

" கல்லறைக்கோயில்கள் எங்கே " மாவீரர் நாள் நினைவு சுமந்து வெளிவந்த புதிய பாடல்!


தேசம் காத்த தெய்வங்களுக்காக தென்னிந்திய இசை அமைப்பாளர் தீனாவின் இசையில் பாடல் ஒன்றை தேசம் காந்த மாவீரர் தெய்வங்களுக்காகவும் மாவீரர் நாளுக்காகவும்
உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள் மேற்கு அவுஸ்திரேலியா தமிழர்கள்.

பாடல் வரிகள் - ஜீவன்

குரல் - நிமல்

இசை - தினா


வெளியீடு - மேற்கு அவுஸ்திரேலியா

 தமிழர்கள்

''கல்லறைக்கோயில்கள் எங்கே கார்த்திகை பூக்குது இங்கே
கதிரவன் ஒளி வரும் என்றே, எங்கள் காலமும் ஓடுது இன்றே

கண்ணிரெண்டும் காரிருள் ஆனது, அதில் மழை வரத்தானே ஏங்குது
நெஞ்சமும் பாலையாய் போனது, நீர் வற்றியே காற்று நெருப்பானது

ஆராரி ராரி ராரி ஆராரி ராரி ராரி

(கல்லறைக்கோயில்கள் எங்கே கார்த்திகை பூக்குது இங்கே)

ஊர் வாழத்தானே உயிர் தந்து போனீர், வேராகத்தானே விருட்சமாக நின்றீர்
யார் செய்த தவறோ அன்று, ஈழம் தாயின்றி தவிக்குது இன்று

கடவுள் வாழ்ந்த வீடு - வீரம் விளைந்த நாடு
காக்க மறந்ததாலே- ஈழம் கருகிப்போன காடு......

காகம் போல கூடு- அந்த கழுகைப்போல பாரு
காலம் சொன்ன பாடம்- நீயும் கூடி நின்று பாடு

வேங்கை சென்ற பாதை- விரைவில் விடியப்போகும் காலை
விழித்திருந்தால் தானே வெற்றிப்பூக்கள் பூக்கும் நாளை
ஈரக்காற்று வீசும்- ஈரக்காற்று வீசும்
ஈழக்கொடி பறந்து வீரம் பேசும்- ஈழக்கொடி பறந்து வீரம் பேசும்''

No comments:

Post a Comment