September 9, 2014

பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம் !

‘ஆயுதங்களைக்கயளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பாமல் எதற்க்காக எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை ஏந்தியது. எதற்க்காக நாம் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை
நடத்தினோம். இதற்கான காரணிகள் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் தோன்றி வளர்ந்த்ஸ் எதார்த்தப் புறநிலைகளை ஆராய்ந்து பார்த்து அதன் காரணிகளை நீக்கிவிட உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஆயுதப் பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும்.
அதனைவிடுத்து ஆயுதங்களைப் போட்டதும் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் எனக்கருதுவதும் மிகத்தவறான கண்ணோட்டமாகும். பூதாகரமாக வளர்ந்துவிட்ட இனப்பிரச்சினையும், அதனால் எழுந்த சுதந்திர வேட்கையின் புரட்சிகர வெளிப்பாடாகவே ஆயுதப் போர்வடிவம் தோற்றம்கண்டது. ஆகவே இனப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படாதவரை ஆயுதப்பிரச்சினை தீரப்போவதில்லை. இதனை சிறீலங்கா ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தையும், நிரந்தரமான அமைதியையும், சுதந்திரமான வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதற்கு எமது விடுதலை இயக்கம் தொடர்ந்து போராடும்.
இன்று எமது மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது எமது இயக்கம் தான். எமது இயக்கத்தை ஒரு பலம் பொருந்திய தேசிய சக்தியாக கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்கள் எமது இயக்கத்தின் பின்னால் அணிதிரளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
- (‘எனது மக்களின் விடுதலைக்காக’ நூலிலிருந்து….)

No comments:

Post a Comment