September 10, 2014

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுபாடுகள் தொடர்பில் கோட்டாபயவுடன் பேச்சு!

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.


பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய சமாதான பேரவையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு கட்டுப்பாடு விதித்து அண்மையில் பாதுகாப்பு சபை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கிய அவதானம் செலத்தப்பட்டது.

இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இணங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment