தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்திற்கு சுரேஸ்பிறேமச்சந்திரன் எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பினை ஏகபிரதிநிதிகள் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும்,எனினும் அவ்வாறு இல்லாவிடின் கூட்டமைப்பினை அரசாங்கம் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளாது என்றும் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்திற்கு சுரேஸ்பிறேமச்சந்திரன் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களே தமிழ்தேசிய கூட்டமைப்பினை ஏகபிரதிநிதிகளாக தெரிவுசெய்துள்ளார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தங்களை தாங்கள் ஒருபோதும் அழைத்தது கிடையாது வடக்கு மாகாண தோ்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களையும் கிழக்கில் 12 தமிழ்ஆசனங்களில் 11 ஆசனங்களை தமிழ்தேசியகூட்டமைப்பு பெற்றுள்ளது ஆகவே அந்தவகையில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக பேசக்கூடிய வல்லமை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினை மக்கள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்துள்ளார்கள்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment