கரும்புலிகள் தினமாகும். இதனை முன்னிட்டு கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்ட ஒருவர் யாழ்குடாவில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடுமையான
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தென்மராட்சிப்பகுதியில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பருத்தித்துறை வீதியினில் வறணி கறுக்காய் பிள்ளையார் கோவில் அருகாமையில் வைத்து அவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடிகாமத்திலிருந்து உடுப்பிட்டியிலுள்ள தனது வீடு நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த அவரை வறணி பகுதியில் ஆட்களற்ற தரவை வெளியில் வைத்து வழிமறித்த சிறீலங்காப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலாளிகள் பின்னர் அவரை ஆட்களற்ற வயல் வெளியினுள் தள்ளி விட்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அவரது உந்துருளியையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளானவர் தங்கராசா பிரபாகரன் என அறியப்படுகின்றது.
No comments:
Post a Comment