July 4, 2014

விடுதலைப் புலிகள் என மீண்டும் மலேசியாவில் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர்  மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

க்ளென்வெலி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒருவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்தூங்கவை 1999ம் ஆண்டு படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என மலேசியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களில் மற்றொருவர் வெடி குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு சந்தேகநபர் இந்தியாவின் பெங்களூர் மற்றும் சென்னையில் வௌிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமைக்கு துணைபுரிந்தவர் எனவும் மலேசியா  பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 14 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களில் ஏழு பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தின் அடையாள அட்டைகள் இருப்பதாக மலேசிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment