July 26, 2014

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான சர்வதேச சாசனத்தில் இலங்கையைக் கைச்சாத்திடுமாறு வலிறுயுத்தல்!

பாலியல் துஸ்பிரயோகங்களை ஆயுதமாக பயன்படுத்தப்படுவதற்கு எதிரான சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 


ஏற்கனவே பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மற்றம் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் போன்றோர் இந்த வலியுறுத்தலை விடுத்து வந்தனர்.  

எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எந்த பதிலையும் வழங்கி இருக்கவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார திணைக்களத்தின் தெற்காசிய விவகார பிரிவு, இலங்கை அரசாங்கம் இந்த சாசனத்தில் விரைவாக கைச்சாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment