July 26, 2014

யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட பல்கலை மாணவி உயிரிழப்பு!

சிறீலங்காவின் தென்பகுதியில் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக கிரிபத்கொட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் கொழும்பு காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறுகின்றன.
உயிரிழந்த மாணவி களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்தவர். அவர் பயின்று வந்த நடிப்பு கலை பாடநெறியில் யோகாசனமும் ஒரு பாடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment