கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்றவர் மீது கடன் வாங்கியவர் கத்தியால் குத்திய சம்பவம் யாழ். அரசடிப் பத்திரகாளி கோவிலடிப் பகுதியில் இடம்பெற்றதாக
யாழ்ப்பாண காவல்தறையினர் தெரிவித்தனர்.
இதில், அதேயிடத்தினைச் சேர்ந்த 53 வயதுடைய ந.கமலநாதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி படுகாயமுற்றவர், தனது உறவினர் ஒருவரிற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைமாற்றாகக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்ற வேளையிலே கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணப் காவல்தறையினர் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment