May 28, 2014

மாந்தைகிழக்கில் 6பாரிய படை காவலரண்களால் மக்களுக்கு இடையூறு!

மன்னார் மாந்தை கிழக்கு பகுதியில் படையிரின் 6 பாரிய காவலரண்கள்
காணப்படுகின்ற நிலையில் மக்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளதுடன்.இரவு நேரங்களில் மக்களும் குறிப்பாக பெண்களும் நடமாடுவதில் அச்சமடைந்துள்ளார்கள்.
மாந்தை கிழக்கு துனுக்காய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராம மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நேரில் சென்று சந்தித்து மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இதன் போது குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் தாம் எதிர்நோக்குத் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.குறிப்பாக குறித்த பகுதிகளில் நீண்ட காலமாக குடி நீர் பிரச்சினை,மின்சாரம் இன்மை,காணிப்பிரச்சினை,பாதைகள் சீரின்மை போன்ற பிரச்சினைகள் நீண்டகாலமாக உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து தரும்படியும் அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் வவுனிக்குளம் அம்பாள் புரம் கிராம மக்களை சென்று சந்தித்துள்ளார்.இதன் போது வவுனிக்குளம் அம்பாள் புரம் கிராம மக்கள் வவுனிக்குளத்தில் நன்நீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த கிராமத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்நீர் மீன் பிடியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் செல்வாக்கை பயண்படுத்தி ஒரு சில தனி நபர்கள் குறித்த குளம் அண்டிய பகுதியில் பண்ணை அமைப்பதற்காக அப்பகுதியில் 50 ஏக்கர் வீதம் காணி பிரிப்பதற்கான நடவடிக்ககைகளில் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் எமது மீன்பிடிக்கு இச் செயற்பாடு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
இதே வேளை மாந்தை கிழக்கு பகுதியில் படையிரின் 6 பாரிய காவலரண்கள் காணப்படுகின்ற நிலையில் மக்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் மக்களும் குறிப்பாக பெண்களும் நடமாடுவதில் அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப்பெற்றுத்தருமாறு அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் போரிக்கை விடுத்தனர்.பாராளுமன்ற உறுப்பினருடன் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.செந்தூரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment