August 4, 2016

விடுதலைப்புலிகளின் நிலைமாறாத நிர்வாகத்தை நிரூபிக்கும் படையப் புலனாய்வுப்பிரிவு!

2009 இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் அனைத்து படைக்கட்டுமாணங்களும் சீர்குலைந்துவிடாமல் செயற்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.


குறிப்பாக விடுதலைப்புலிகளின் படையப் புலனாய்வுப்பிரிவு தமது பணிகளை திறன்பட செயற்படுத்தியுள்ளது என்பதற்குறிய ஆதாரங்கள் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இன்னமும் அழிந்துவிடாமல் கிடக்கின்றதை அவதானிக்கமுடிகின்றது.

அந்த வகையில் 29-03-2009ல் விடுதலைப்புலிகளின் படையப்புலனாய்வு துறைசார் செயற்பாட்டுக்கான அனுமதி அட்டையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தின் ஒப்புதலுடன் களமுனை ஆளணி ஒழுங்கமைப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் நந்திக்கடல் தரையில் ஆவணம் ஒன்று தற்பொழுது ஆதாரமாக கிடைத்துள்ளது.

அதில் அனுமதியட்டை தவரும்பட்சத்தில் சோதனைக்குழுவிடம் முரண்படவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் சோதனைக்குழுவின் செயற்பாடும் இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி பணியில் இருக்கும் நேரம் தவிர எந்நேரமும் உரியவர்கள் அனுமதி அட்டையை தம்முடன் வைத்திருக்கவும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் பணிக்கான நேரஒழுங்கு இருந்துள்ளதை நிரூபிக்கின்றது.

குறித்த செயற்பாடுகள் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சரிவர செயற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் மனித உரிமையை மீறவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

எனவே அவர்களின் கட்டமைப்பை சீர் குழைப்பதற்காக அரசபடையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனமாகியுள்ளது.

இருப்பினும் அரசபடையின் ஆள ஊடுருவும் படையணியின் செயற்பாட்டை விடுதலைப்புலிகளினால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment