தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் 03.08.2016 புதன்கிழமை கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் அமைப்பு விவகாரங்களில் இன்றைய நிலை தொடர்பாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் தெளிவாக கூறப்பட்டதுடன், இவ் அரசியல் அமைப்பு விவகாரங்கள் சரியான முடிவுக்கு வரும்வரை இவ் விடயங்களை குழப்பும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்க கூடாது எனவும் தெரிவித்ததுடன், தலைவரின் கருத்துக்களை மத்திய குழு ஏற்றுக்கொண்டதுடன், தீவிரமான கருத்துக்களையும் மத்தியகுழு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற சமகால பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது..
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும், கிராமங்கள் தோறும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தல் தொடர்பாகவும் தீவிரமாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய மத்தியகுழு கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் திரு சு.சதானந்தம், உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு ச.வியாளேந்திரன்(எஸ்.எஸ்.அமல்), உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உப தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், உப தலைவர் பத்தன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும் முல்லைத்தீவு மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான திரு க.சிவநேசன்(பவன்), செயற்குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

No comments:
Post a Comment