அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அம்பாறை கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இருவர் முச்சக்கரவண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த பொலிஸாரும் மாணவியை மீட்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியுடன், மற்றுமொரு இளைஞரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தலை மேற்கொண்ட இளைஞனும் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவன் என்றும், குறித்த மாணவிக்கும், மாணவனுக்கும் ஏற்கனவே காணப்பட்ட காதல் தொடர்பு தற்போது முறிந்துள்ளதாகவும் இதன்காரணமாகவே குறித்த மாணவன், மாணவியை கடத்துவதற்கு முற்பட்டிருந்ததாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து பாடசாலை சீருடை, போத்தல் வகைகள் ,கைத்தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment