July 5, 2016

மஹிந்தானந்தவின் டிபென்டர் வாகன இரகசியம் அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமவினால் மறுக்கப்பட்டு வந்த விடயம் தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.


WP GE -2034 டிபென்டர் ஜுப் வண்டியை தான் ஒரு போதும் கண்ணால் கண்டது கூட இல்லை முன்னாள் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே சத்தியம் செய்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான WP GE -2034 டிபென்டர் ஜுப் வாகனத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தேர்தல் இலக்க போஸ்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளமை தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டு மஹிந்தானந்தவின் உறவினரான வீரசிங்க அளுத்கமகே உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகியுள்ளது.

மஹிந்தானந்த தான் கண்டதே இல்லை என கூறிய டிபென்டரை பயன்படுத்தி வீடுகளுக்கு தீ வைத்தமை மற்றும் மோசடி செயல்கள் தொடர்பில் வெகு விரைவில் தகவல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாஜுடீன் கொலை செய்யப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் வெள்ளை நிறத்திலான டிபென்டர் தொடர்பில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல் வெளியிட்ட போது, பலர் பரிகாசம் மற்றும் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment