பரவிப் பாஞ்சான் மக்களுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேயர் ஜெனரல் கருனாசேகர தெரிவித்ததாக கிளிநொச்சி இராணுவ கேணல் கொலம்பகே தெரிவித்தார்.
இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி நடைபெற்றுக் கொண்டுள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு இன்று இரவு ஒன்பது மணிக்கு விஜயம் செய்த கிளிநொச்சி இராணுவ கேணல் கொலம்பகே இராணுவத் தளபதி மேயர் ஜெனரல் கருனாசேகர தெரிவித்ததாக கூறினார்.
அவர் தொடர்ந்து அவ் மக்களுடன் உரையாடுகையில் தாம் கட்டம் கட்டமாக காணிகளை விடுவித்து வருவதாகவும் உங்கள் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு உங்களது காணிக்கையும் விடுவிக்க தமது உயர் அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் ஏற்ப்பாடு செய்வதாகவும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மக்கள் நாங்கள் இருப்பதற்கு வீடு இல்லாமல் தான் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எமது காணிகளை தருகிறோம் என கூறும் வரைக்கும் அமைதியான முறையில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எமக்கு கிளிநொச்சி அரசாங்க அதிபர் திங்கட்கிழமைக்குள் உறுதியான முடிவை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்
இதற்குப் பதிலளித்த கிளிநொச்சி இராணுவ கேணல் கொலம்பகே நாளையதினம் ஞாயிறு என்பதால் திங்கட் கிழமை கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக கிளிநொச்சி பொலிசாரும் தங்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்த அவர்கள் மாலை வேளை பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் அவர்களும் தங்களை சந்தித்து பேசியதாகவும் உங்களது காணிகளை பத்து நாட்களுக்குள் விடுவிக்க முடியும் என்று என்னால் பொய் வாக்குறுதி தர முடியாது ஆனால் உங்கள் காணிகளை விடுவிக்கும் வரை நானும் விடப் போவது இல்லை எனவும் இக் விடுவிப்பு சம்பந்தமாக பாராளுமன்றம் தொடக்கம் எல்லா இடங்களிலும் பேசி உள்ளேன் விடுவிக்கும் வரை எனது பங்களிப்பு முழுமையாக இருக்கும் என தெரிவித்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
அனைவரும் இவ்வாறு கருத்துக்களை கூறுகின்றமையால் தமக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment