July 10, 2016

மன்னாரில் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி !

அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பரிவுக்குற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சிறு மீனவர்களுக்கு நேற்று முந்தினம் வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திடீர் சூறாவெளி மற்றும் வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பின் தங்கிய மீன்பிடி கிராமங்களான இலுப்பைக்கடவை, அந்தோனியார் புரம், கத்தாளம்பிட்டி போன்ற கிராமங்களில் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை சிறு வலைகள் மூலமாக மீன்பிடித்து நாளாந்த ஜீவனோபாயம் செய்யும் மீனவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

மேற்படி மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இலுப்பைக்கடவை பங்குத் தந்தை அருட்தந்தை றஜனிகாந் அடிகளார் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினை அணுகிய போது அதன் இணைப்பாளர்  சிங்கிலேயர் பீற்றர் அவர் மொறட்டுவ கட்டில் ஏய்ட்  ஸ்தாபனத்தில் உதவி பெற்று மூன்று லட்சம் ரூபாயில் (ரூபாய் 3,00,000) நிதி மூலம் 10 குடும்பங்களுக்கு  நண்டுவலை, இறால்வலை, மீன் வலை, கம்பு, ஈயம், மிதப்புக்கட்டை, தங்கூசி போன்றவற்றை கொள்வனவு செய்து நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment