போர் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் இலங்கை அரசுக்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்திய 5 சர்வதேச நீதிபதிகளே கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடும் அழுத்தங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஒன்பது மாதங்களில் இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதில் எப்படி வழக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க உள்ள மனித உரிமை ஆணையாளர், அது குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்பிக்க உள்ளார்.
இதனிடையே கலப்பு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவின் முன்னுதாரணத்தை கொண்டு உண்மையை கண்டறியயும் ஆணைக்குழு செப்டம்பர் மாதம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கு தவறுகளை மன்னிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment