சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்திலோ, நீதித்துறையிலோ எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றம், நீதிபதி அல்லது அமைப்பும் தலையீடு செய்வதற்குத் தாம் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாணந்துறை நகர மண்டப மைதானத்தில் நேற்று நடந்த ராமன்ன மகாநிக்காயவின் 70 ஆவது தேசிய உபசம்பாத விநயகர்மவில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு, எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு இராணுவ நீதிமன்றங்களை அமைப்பது மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக, பல்வேறு கருத்துக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வெளியிடப்பட்டாலும், சுதந்திரம், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் வகையிலான எந்தவொரு தேசிய அல்லது அனைத்துலக செயற்பாட்டுக்கும் இடமளிக்கமாட்டேன்.
தாய்நாட்டின் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில், செயற்படுவதற்குத் தயங்கமாட்டேன் என்று மகாசங்கத்தினருக்கு உறுதியளிக்கிறேன்.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய விவகாரங்களில் மகாசங்கத்தினரின் மதிப்புக்குரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலில் செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஆகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment