July 9, 2016

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு எதிராக வழக்கு?

ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர்.


மனித உரிமைப் பிரகடனங்களை மீறி இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் என சயிட் அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கை தொடர்பில் செய்துள்ள 38 பரிந்துரைகளில்; 35 பரிந்துரைகள் மனித உரிமை துறைசார் விடயங்களுக்குப் புறம்பானது என இந்த புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.

இந்த மனுவை தாக்கல் செய்ய பிரிட்டன் சட்டத்தரணி ஒருவர் இணங்கியுள்ளதாக இலங்கைப் புத்தஜீவிகளைக் கொண்ட குழுவின் பிரதிநிதியொருவர் கூறியுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment