July 9, 2016

வலி. வடக்கு வீமன்காமம் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு பௌத்த விகாரை நிர்மாணிப்பு இந்துக்களை பாதித்துவிட்டதாக இந்து மாமன்றம் கண்டனம்!

வலி. வடக்கு வீமன்­காமம் பிள்­ளையார் ஆலயம் அழிக்­கப்­பட்டு அவ்­வி­டத்தில் பௌத்த விகாரை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இது இந்­துக்­களின் மனோ­நி­லையை பாதிப்­ப­டைய செய்­துள்­ளது.


நல்­லாட்சி என்று கூறிக்­கொள்ளும் அர­சாங்­கமும் இதனைத் தடுத்து நிறுத்­த­வில்லை. இதற்கு இந்­துக்­களின் சார்பில் இந்­து­மா­மன்றம் தனது கண்­ட­னத்தை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளது.

மன்றம் விடுத்­துள்ள செய்­தியில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

இலங்­கையின் வடக்­குக்­கி­ழக்கு பிர­தே­சங்­களில் தமி­ழர்கள் செறிந்து வாழும் இடங்­களில் புத்­த­வி­கா­ரைகள் அமைக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தையும் இது தமிழ் இந்­துக்­க­ளி­டையே மிகவும் விச­னத்தைத் தோற்­று­விப்­ப­தா­கவும் ஏற்­க­னவே அர­சியல் தலை­மை­க­ளுக்குப் பல தட­வைகள் அகில இலங்கை இந்து மாமன்றம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அண்­மையில் கூட வட­மா­கா­ணத்தில் பல்­வேறு இடங்­க­ளி­லும் அமைக்­கப்­பட்­டுள்ள புத்­த­வி­கா­ரை­களின் புகைப்­ப­டங்கள் உட்­பட சகல விப­ரங்­க­ளையும் பிர­தமர், மீள்­கு­டி­யேற்ற அமைச்சர், எதிர்­க்கட்சித் தலைவர் ஆகி­யோ­ருக்கு பிர­தி­க­ளுடன் ஜனா­தி­ப­திக்கும் முறை­யிட்­டி­ருந்தோம்.

எனினும் எவ்­வித சாத­க­மான நட­வ­டிக்­கையும் இது­வரை எடுக்­கப்­பட்­ட­தாகத் தக­வல்கள் இல்லை என்­பது மிகவும் மன­வே­த­னைக்­கு­ரி­ய­தாகும்.

இந்­நி­லையில் இரு தினங்­க­ளுக்கு முன்னர் வெகு­ஜன ஊட­கங்கள் மூல­மாக கேள்­வி­யுற்ற செய்­தியால் இந்து மக்­களின் உச்ச நிறு­வ­ன­மான அகில இலங்கை இந்து மாமன்றம் மிகவும் கவ­லைக்­குள்­ளா­கி­யது.

கடந்த காலங்­களில் பாது­காப்பு வல­யங்­க­ளாக இருந்து தற்­போது விடு­விக்­கப்­பட்ட வலி­வ­டக்கு பிர­தே­சத்தில் அமைந்­தி­ருந்த வீமன்­காமம் பிள்­ளையார் ஆலயம் உடைக்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­ட­துடன் அவ்­வி­டத்தில் பௌத்­த­வி­கா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது இந்­துக்­களின் மன­நி­லையை அவர்­க­ளது இறை நம்­பிக்­கையை எவ்­வ­ளவு தூரம் பாதிக்கும் என்­பதை இரா­ணு­வத்­தினர் உண­ர­வில்­லை­யா­யினும் நல்­லாட்சி அரசு எனக்­கூ­றிக்­கொள்ளும் அரசு கூட இதனைத் தடுப்­ப­தற்கு எவ்­வித அக்­க­றையும் கொள்­ள­வில்­லை­யென்­பதைக் கவ­லை­யுடன் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றோம்.

வலி­வ­டக்கில் இன்­னமும் இரா­ணுவத் தேவைக்­கென பாரி­ய­ளவு நிலப்­ப­ரப்பு படை­யினர் வசம் உள்­ளது. இதில் அமைந்­தி­ருந்த எத்­தனை ஆல­யங்­க­ளுக்கு இவ்­வா­றான நிலை தோன்­றி­யுள்­ளதோ தெரி­ய­வில்லை.

ஒவ்­வொரு மனி­த­னுக்கும் தனது சம­யத்தைச் சுதந்­தி­ர­மாகக் கடைப்­பி­டிக்கும் உரிமை இலங்­கையில் அர­ச­மைப்­பு­ரீ­தி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள­தோடு ஒரு சம­யத்தை வளர்க்­கின்றோம் என்­ப­தற்­காக இன்­னொரு சமயச் சின்­னங்­களை அழித்­தொ­ழிப்­பதை எவ்­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்­த­வு­மில்லை.

புத்­த­பிரான் அகிம்­சையைப் போதித்து பௌத்த மதத்தை ஏற்­ப­வர்கள் யாவரும் அகிம்­சை­வ­ழி­யிலே செயல்­பட வேண்­டு­மெ­னவும் கூறி­யுள்ளார்.

பௌத்த மதத்தைப் பின்­பற்­று­ப­வர்­க­ளெனக் கூறிக்­கொள்ளும் இலங்கை இரா­ணு­வத்­தினர் இவ்­வா­றான மனி­தா­பி­மா­ன­மற்ற செயல்­களில் ஈடு­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­துடன் இந்­துக்­களால் ஜீர­ணிக்க முடி­யா­த­து­மாகும்.

இவ்­வா­றான செயல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­து­வ­துடன், தொடர்ந்தும் தமிழ் பிர­தே­சங்­க­ளி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளுக்கு பாது­காப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கியமாக இராணுவப் பிரதேசங்களிலுள்ள இந்து ஆலயங்கள் பாதுகாக்கப்படுவதுடன் அந்நிலப் பரப்பை மக்களிடம் மீளக் கையளிக்கும்போது சேதமடைந்த மத வணக்க ஸ்தலங்களை புனரமைப்புச் செய்து கையளிக்க வேண்டுமெனவும் உறுதியாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment