July 9, 2016

மஹிந்த தனக்கு மின்­சார கதிரை அச்­சு­றுத்தல் இருப்பின் பாரா­ளு­மன்­றத்தில் கூற­லாமே? இரா­ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார !

போர்க் குற்­றங்கள் மற்றும் மின்­சார கதிரை தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ போலி­யான பிர­சா­ரங்­களை மட்­டுமே விகா­ரை­க­ளிலும் ஏனைய இடங்­க­ளிலும் பரப்பி வரு­கிறார்.


அந்த தக­வல்­களில் எவ்­வித உண்மை தன்­மையும் இல்லை. அவர் கூறி வரு­வது போல மின்­சார கதி­ரைகள் தொடர்­பாக அவ­ருக்கு அச்­சு­றுத்தல் இருந்­தி­ருந்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த குற்­றச்­சாட்டில் சிக்­கி­யி­ருப்பார் என திறன்கள் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார தெரி­வித்தார்.

பாரா­ளு­ம­ன்றத்தில் அமர்­வு­களில் கலந்து கொண்டு தமக்கு உள்ள பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும், தமக்கு உள்ள அச்­சு­றுத்தல் தொடர்­பா­கவும் கூறாது வேறு இடங்­களில் மஹிந்த பிர­சா­ரங்­களை பரப்பி வரு­வது வேடிக்­கை­யா­கவும் விமர்­ச­னத்­துக்கு உரி­ய­தா­கவும் உள்­ளது என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ போர்க் குற்­றங்கள் மற்றும் மின்­சார கதிரை தொடர்­பாக போலி­யான தக­வல்­க­ளையும் பிர­சா­ரங்­க­ளயும் மட்­டுமே மேற்­கொண்டு வரு­கின்றார்.

அந்த தக­வல்­களில் எவ்­வித உண்மை தன்­மையும் இல்லை. அவ­ருக்கு அர­சியல் தெரி­யாமல் இல்லை. பொய்ப் பிர­சா­ரங்கள் மூலமும் பொய்­யான தக­வல்கள் மூலமும் மக்­களை எவ்­வாறு ஏமாற்­று­வது என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரிந்­தி­ருக்­கி­றது.

அத­னா­லேயே அவர் விகா­ரை­க­ளிலும் வேறு சில இடங்­க­ளிலும் இவ்­வா­றான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

எல்லா இடங்­க­ளிலும் தாம் மக்­களின் பிர­தி­நிதி மட்­டுமே. ஒரு போதும் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யல்ல என கூறி வரு­கின்றார். உண்­மையில் மக்­களின் பிர­தி­நிதி என்றால் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் கலந்து கொண்டு போர் குற்­றங்கள் தொடர்­பா­கவும் மின்­சார கதி­ரைகள் தொடர்­பா­கவும் தமக்கு இருக்­கின்ற அசச்­சு­றுத்­தல்கள் தொடர்­பா­கவும் விவா­திக்­கலாம்.

அவ்­வாறு அவர் விவா­திப்­பா­ராக இருந்தால் அர­சாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய முடி­வு­களை வெளி­யிடும். முன்னாள் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு பாது­காப்பு வழங்க வேண்­டிய மிக முக்­கிய கடப்­பாடு அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது. அதனை விடுத்து விகா­ரை­களில் அர­சாங்­கத்தை விமர்­சிப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.

தேர்­த­லுக்கு பிறகு அவர் பாரா­ளு­மன்­ற­துக்கு வரு­வதே கிடை­யாது. அவரை பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்த மக்­களின் நிலை என்­ன­வென்­பது கூட அவ­ருக்கு தற்­போ­தைய சூழ்­நி­லையில் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

பொய் பிர­சா­ரங்கள் மூலம் மக்­களின் வாக்­கு­களை மீண்டும் மஹிந்த கைப்­பற்றி ஆட்­சியை பிடிக்­கவே இவ்­வாறு பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு கொண்டு வரு­கின்றார்.

மஹிந்­தவை தலை­வ­ராக கொண்டு செயற்­பட்டு வரும் எதி­ர­ணியும் அவ்­வாறே உள்­ளது. அந்த குழு­வுக்கு மஹிந்த இல்­லாமல் அர­சியல் செய்ய முடி­யாது.

கடந்த அர­சாங்­கத்தில் அவர்கள் செய்த குற்­றங்­களை மறைப்­ப­தற்­கா­கவே அவர்கள் அர­சாங்­கத்தை நேர­டி­யாக விமர்­சித்து வரு­கின்­றனர். இது தொடர்­பாக மக்கள் தகுந்த நேரத்தில் தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்­பார்கள்.

வற் வரி தேசி­ய­அ­ர­சாங்கம் வற் வரியை நூற்­றுக்கு 15 விகி­த­மாக அதி­க­ரித்து மக்­களின் சுமை­களை மேலும் கூட்­டு­கி­றது என்று பலர் விமர்­சித்து வரு­கின்­றனர்.

அவர்கள் ஒரு உண்­மையை விளங்கிக் கொள்ள வேண்டும். மைத்­திரி–ரணில் இணைந்த தேசிய அர­சாங்கம் ஒருபோதும் மக்­களின் மீது சுமை­களை ஏற்­றி­ வைக்கவில்லை. நாட்டு நலனே அர­சாங்­கத்­துக்கு முக்­கியம்.

அதனை முக்­கிய குறிக்­கோ­ளாக கொண்டு அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. இதனை அர­சாங்­கத்தை விமர்­சிக்­கின்­ற­வர்கள் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.

அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் ஒரு போதும் அதி­க­ரிக்­கப்­பட வில்லை. பற்­ப­சைக்கும் பற் தூரி­கைக்கும் மட்­டுமே வற் வரி அற­வி­டப்­பட்­டுள்­ளது.

அதற்கு மாறாக அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளான சீனி , பருப்பு ,நெத்­திலி போன்ற பொருட்­க­ளுக்கு வற் வரி அற­வி­டப்­படவில்லை. கூட்டு எதிர்க்­கட்­சியின் தூண்­டு­த­லினால் நாடு முழு­வதும் கடை­ய­டைப்பு செயற்­பா­டு­களை வியா­பா­ரிகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த கடை­ய­டைப்பு செயற்­பா­டு­க­ளினால் ஒருபோதும் வியா­பா­ரிகள் பாதிப்­ப­டைய வில்லை. கடந்த அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திடம் இருந்து பெற்ற கடனை அடைக்­கவே தேசிய அர­சாங்கம் வற் வரியை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது என்­பதன் கார­ணத்தை மக்கள் நன்கு அறி­வார்கள்.

எனினும் கூடிய விரைவில் ஜனா­தி­பதி பிர­த­மரின் தலை­யீட்­டினால் வற் வரி குறைக்­கப்­படும்.

பஸ் கட்­ட­ணங்கள் அதி­க­ரிப்பு. பஸ் கட்­ட­ணங்கள் அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட போவதாகவும் ஒரு தகவல் கசிந்திருந்தது.

எனவே இந்த விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி தலையீட்டில் இருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என்றார்.

No comments:

Post a Comment