July 23, 2016

அமெரிக்க கடற்படையின் முக்கிய கப்பல் இலங்கையில்…!

அமெரிக்க கடற்படையின் 13வது கடற்படை ஆய்வுப் பிரிவுடன் இணந்ததாக, யு.எஸ்.எஸ் நியூ ஓர்லீன்ஸ் (எல். பி. டீ 18) கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.


இந்த கப்பல் எதிர்வரும் 24 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அமெரிக்க துாதரம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படையுடன் இருதரப்பு உறவுகளை அதிகரிப்பதற்கும், மனிதநேய உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் தொடர்பில் அனுபவங்களையும், பயிற்சிகளையும் வழங்குவதற்கும் இந்த கப்பல் மற்றும் MEU பிரிவு என்பன ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளன.

“கடலோர பாதுகாப்பு மற்றும் நிலைபேற்றிற்கான பிரதான சக்தியாக மாறுவதற்கு ஸ்ரீலங்கா கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா ஆர்வத்துடன் உள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க துாதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலில் 13 ஆவது MEU உறுப்பினர்கள், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் நிபுணர்களினால் நடத்தப்படும் இரண்டு நாள் மனிதநேய மற்றும் அனர்த்த நிவாரண பயிற்சிகளில் ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த சுமார் 200 மாலுமிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலவச கல்வி மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளுடன் இணைந்து மாலுமிகளும், கடற்படை வீரர்களும் கொழும்பில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

அத்துடன் உள்ளுார் பாடசாலை நூலகம் ஒன்றிற்கு 600இற்கும் மேற்பட்ட நூல்களை நன்கொடையாக கப்பல் வழங்கவுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவிற்கான ஏழு மாத ஈடுபடுத்தலின் ஒரு அங்கமாக அமெரிக்க பசுபிக் கட்டளைப் பகுதியில் யு.எஸ்.எஸ் நியூ ஓர்லீன்ஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்றின் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக்கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment