காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம் மறந்துவிட்டாய் நம் நிலத்தை மைத்திரி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்ற இப் போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்கள் ஓமந்தை நோக்கி பயணித்திருந்ததுடன் யாழ்ப்பாணம் வரையிலும் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தனர்.

No comments:
Post a Comment