July 9, 2016

வலி வடக்கில் ஆலயங்கள் அழிவடைந்த நிலையில் சில விக்கிரகங்கள் களவாடப்படுகின்றது!

வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த ஆலயங்கள் அழிவடைந்த நிலையில் சில விக்கிரகங்கள் காணப்பட்டன . ஆனால் அவை தற்போது களவாடப்படுகின்றது இதற்கு பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்படுகின்றது.


மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம்இ ட ம்பெற்ற சிவில் நிலை தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்படி கோரிக்கை விடப்பட்டது.

குறித்த கோரிக்கை தொடர்பில் ,

வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த பல ஆலயங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் இங்கு பல  விக்கிரகங்கள் காணப்பட்டன . ஆனால் அவை இன்று களவாடப்படுகின்றது இதற்கு பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத வழிபாட்டுத் தலங்கள் உட்பட வலி. வடக்கின் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ள நிலையில். எஞ்சிய சொத்துக்களையாவது பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. என கோரிக்கை விடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ,

குறித்த விடயம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டது. இருப்பினும் போதிய பொலிசார் இன்மையால் உடன் கவனம் செலுத்தப்படவில்லை. தற்போது எமது நிலையத்திற்கு 20 பொலிசார் புதிதாக கடமைக்கு வந்துள்ளனர். அதனால் இப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இப் பிரதேசத்தில்உள்ள கிராம சேவகர் ஒருவரின் வீட்டில் கூட பயன்தரு மரங்களை தறித்துச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. என்றார்

No comments:

Post a Comment