July 9, 2016

மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்!

கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.


இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டம் பரவிப்பாஞ்சான் செல்லும் வீதி முன்னறில் மக்கள் அமர்ந்திருந்து தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போராட்டம் தமது காணிகளைத் தம்மிடம் கையளிக்கும் வரை தொடர்ச்சியான போராட்டமாக இன்றிலிருந்து இடம்பெறவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பமாக கலந்து கொண்டுள்ளனர். தமக்கு ஒரு உறுதியான பதில் தரப்படாது விட்டால் இப்போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக பரவிப்பாஞ்சான் மக்களால் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த நிலையில் பரவிப்பாஞ்சான் மக்கள் குடியிருப்புக் காணிகளில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைத்து அம்மக்களை அப்பகுதியில் மீளக்குடியமர விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்வதற்கு ஏற்ற இடமின்றி அவலப்படுகின்றார்கள்.

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதாகக் கூறப்படுகின்ற போதிலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியபடி அவலம் நிறைந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றார்கள்.





No comments:

Post a Comment