July 9, 2016

போதைப்பொருள் கடத்தலுடன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவ உளவாளி!

அச்சுவேலியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு பட்டமைக்கான சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவ உளவாளியாகச் செயல்பட்டவரே என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.


யாழ். குடாநாட்டில் அதிகரித்த போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றனவே அன்றி அதனுடன் தொடர்பு பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுவதாக மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் சுட்டிக்காட்டியமைக்கு பதிலளித்து உரையாற்றும்போதே பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் ,

கடந்த இரு வாரங்களில் மட்டும் இரு வேறு சம்பவங்களில் 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இரகசிய விசாரணைகள் தொடர்கின்றன.

இதில் அச்சுவேலியில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவ உளவாளியாக செயல்பட்டவர். என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. என்றார்

No comments:

Post a Comment