July 9, 2016

முறிகண்டிப் பிள்ளையார் குளத்தி ன் அணைக்கட்டினை இராணுவத்தினர் வெட்டிவிட்டுள்ளமையினாலேயே வருடா வருடம் தாம் இடம்பெயர வேண்டிய அவலம்!

மக்களிற்காக கட்டப்பட்ட முறிகண்டிப் பிள்ளையார் குளத்தி ன் அணைக்கட்டினை தமது முகாம் நலன்கருதி இராணுவத்தினர் வெட்டிவிட்டுள்ளமையினாலேயே வருடா வருடம் தாம் இடம்பெயர  வேண்டிய அவலம் முறிகண்டி , வசந்தநகர் வாழ் மக்களிற்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில்உள்ள மேற்படி இருகிராமத்திற்கும் அருகிலேயே முறிகண்டி பிள்ளையார் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினையும் சேர்த்து அபகரித்துள்ள இராணுவம் குளத்தின். நடுவே தமது முகாமிற்கான பாதையினையும் அமைத்துள்ளனர்.

இதனால் மாரிகாலங்களில் குளத்தின்நீரானது இராணுவத்தினர் தமது பாவனைக்காக அமைத்துள்ள வீதியை மேவியும் , முகாம் பிரதேசத்திற்கும் நீர் புகுவதை வெளியேற்றவே குளத்தினுள் நீரை தேங்கவிடாது மக்கள் வாழ்விடத்திற்குள் அணையை உடைத்து நீரை வெளியேற்றுகின்றனர்.

இவ்வாறு வெளியேற்றும் நீரே வருடாவருடம் இப் பிரதேச மக்களை இடம் பெயரவைக்கின்றது. இப்பிரதேசத்தில் முன்னைய காலங்களிலும் நீர் வழிந்தோடுகின்றபோதும் இவ்வாறு 2010ம் ஆண்டிற்குப் பின்பு தேங்கும் அளவிற்கு நீர் தேங்குவதில்லை என்ற காரணத் தொடர்பில் ஆராய்ந்த சமயமே குறித்த காரணம் தெரியவருவதாக பிரதேசவாசிகள் தெரவிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி மேற்படி குளத்தினை புனரமைப்பு செய்வதற்கு இருமுறை நிதி அனுமதி கிடைத்தபோதிலும் அப்புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவிடாதும் படையினரே தடுக்கின்றனர் உன் கிராம மக்கள் தெரிவி க்கின்ற னர்.

மக்களின் குறித்த குற்றச் சாட்டுத்தொடர்பில் மாவட்ட அரச அதிபர் திருமதி.ரூபவதி. கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

இது தொடர்பில் இம் மாவட்டத்தில் நான் கடமையை பொறுப்பேற்ற காலம் முதல் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் தற்போது சுட்டிக்காட்டப்படுவதனால் இது தொடர்பில் உரிய திணைக்களங்களின் ஊடாக  இருந்து உரிய தகவலைப்பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும். எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment